'காவிரியின் உபரிநீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணை' - கர்நாடக மந்திரி சர்ச்சை பேச்சு
காவிரியின் உபரிநீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக கர்நாடக மந்திரி பிரியங் கார்கே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக மாநில துணை முதல்-மந்திரியும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்தைச் சந்தித்து மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கர்நாடக காங்கிரஸ் மந்திரி பிரியங்க் கார்கே கூறியதாவது:-
காவிரியின் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணைகட்ட திட்டமிட்டுள்ளோம். யாருடைய ஒதுக்கீட்டு நீரை தடுக்கவோ, மறுக்கவோ அணை கட்ட திட்டமிடவில்லை. மேகதாது அணை திட்டம் குறித்து தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பிரியங்க் கார்கேவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியை தமிழக அமைச்சர் துரைமுருகன் சந்தித்த நிலையில் கர்நாடக மந்திரி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.