இந்தியா-வங்காளதேச எல்லையில் சட்ட விரோத கடத்தல்; ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!
இந்தியா-வங்காளதேச சர்வதேச எல்லையின் வெவ்வேறு இடங்களில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றினர்.
சில்லாங்,
வங்காளதேசத்துக்கு கடத்தப்பட இருந்த ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றை மேகாலயா எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் நேற்று நடத்திய சோதனையில், இந்தியா-வங்காளதேச சர்வதேச எல்லையின் வெவ்வேறு இடங்களில் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றினர்.
மேலும், இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக அழகுசாதனப் பொருட்களை எடுத்துச் சென்றதற்காக, இந்த கள்ளக்கடத்தலில் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைதான நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story