மெமு, டெமு ரெயில்கள் சேவை நீட்டிப்பு
மாரலஹள்ளியில் நின்று செல்லும் மெமு, டெமு ரெயில்கள் சேவை நீட்டித்து தென்மேற்கு ரெயில் அறிவித்துள்ளது.
பெங்களூரு:-
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெங்களூரு ரெயில் நிலையங்களில் இருந்து கோலார், பங்காருப்பேட்டை, குப்பம், கே.ஆர்.புரம், மாரிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் டெமு மற்றும் மெமு ரெயில்களை மாரலஹள்ளி ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி (வண்டி எண்:06381/06382) பெங்களூரு கண்டோண்மென்ட்-கோலார்-பெங்களூரு கண்டோண்மென்ட் மார்க்கங்களில் இயக்கப்பட்டு வரும் டெமு ரெயில், (வண்டி எண்:06561) கே.எஸ்.ஆர். பெங்களூரு-பங்காருப்பேட்டை மெமு, (வண்டி எண்:06292) குப்பம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு மெமு, (வண்டி எண்:01774) கே.எஸ்.ஆர். பெங்களூரு-மாரிக்குப்பம் மெமு, (வண்டி எண்:01773) பங்காருப்பேட்டை-கே.எஸ்.ஆர். பெங்களூரு மெமு, (வண்டி எண்:06291) கே.ஆர்.புரம்-குப்பம் மெமு, (வண்டி எண்:06562) மாரிக்குப்பம்-கே.ஆர்.புரம் மெமு, (வண்டி எண்:01775) கே.எஸ்.ஆர். பெங்களூரு-மாரிக்குப்பம் மெமு, (வண்டி எண்:01776) மாரிக்குப்பம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு மெமு, (வண்டி எண்:01779/01778) பையப்பனஹள்ளி-மாரிக்குப்பம்-பையப்பனஹள்ளி மெமு உள்ளிட்ட ரெயில்கள் வருகிற செப்டம்பர் மாதம் 26-ந் தேதி வரை மாரலஹள்ளி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். இதேபோல் கே.எஸ்.ஆர்.பெங்களூரு-ஜோலார்பேட்டை மெமு (வண்டி எண்:16520) மற்றும் ஜோலார்பேட்டை-கே.எஸ்.ஆர். பெங்களூரு மெமு (வண்டி எண்:16519) ரெயில்கள் இருமார்க்கங்களிலும் ஹூடி ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இந்த சேவை செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.