சட்டசபையை நோக்கி நிர்வாணமாக சென்ற நபர்களால் பரபரப்பு: அலறி அடித்து ஓட்டம் பிடித்த பெண்கள்...!


சட்டசபையை நோக்கி நிர்வாணமாக சென்ற நபர்களால் பரபரப்பு: அலறி அடித்து ஓட்டம் பிடித்த பெண்கள்...!
x

சத்தீஸ்கரில் போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசுப்பணி நியமனம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை கோரி சட்டசபை நோக்கி நிர்வாண ஓட்டம் நடத்தியவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுப் பணி நியமனத்தில் எஸ்.சி.எஸ்.டி., பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி போலியாக எஸ்.சி. எஸ்.டி., சாதி சான்றிதழ் பெற்று 267 பேர் அரசுப் பணி நியமனம் பெற்றதாகப் புகார் எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த சிலர் பலமுறை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் விரக்தி அடைந்தனர்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலச் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று (18 ம் தேதி) துவங்கியது. இதையறிந்த பாதிக்கப்பட்ட 12 க்கும் மேற்பட்டோர் அரசின் கவனத்தை ஈர்ப்பதாகக் கூறி சட்டசபை நோக்கி நிர்வாண ஓட்டம் நடத்தினர். இதன் புகைப்படம், வீடியோ சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவியது.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டசபையை நோக்கி நிர்வாணமாக ஆண்கள் அணிவகுத்துச் செல்வதைப் பார்த்த அந்த வழியாகச் சென்ற ஆண்கள் மற்றும் பெண்கள், அலுவலகத்திற்குச் சென்றோர் அதிர்ச்சியடைந்தனர்.


Next Story