ராஜாசீட் பூங்காவில் மந்திரி பி.சி.நாகேஸ் ஆய்வு


ராஜாசீட் பூங்காவில் மந்திரி பி.சி.நாகேஸ் ஆய்வு
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மடிகேரியில் உள்ள ராஜாசீட் பூங்காவில் மந்திரி பி.சி.நாகேஸ் ஆய்வு செய்தார்.

குடகு:-

குடகு மாவட்டம் மடிகேரியில் ராஜாசீட் பகுதியில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை ஒவ்ெவாரு ஆண்டும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவை மேம்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையின் படி சமீபத்தில் ராஜாசீட் பூங்கா மேம்படுத்தப்பட்டது. மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா சுற்றுலா பயணிகளின் கவரும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த மேம்பாட்டு பணிகளை மாவட்ட பொறுப்பு மந்திரியான பி.சி.நாகேஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் பூங்கா ேமம்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இந்த பூங்காவை முறையாக பராமரிக்கவேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story