நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மந்திரி ஆர்.அசோக் ஆய்வு


நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மந்திரி ஆர்.அசோக் ஆய்வு
x

சுள்ளியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மந்திரி ஆர்.அசோக் ஆய்வு செய்தார்.

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியாவில் கடந்த 10 நாட்களில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் சுள்ளியா தாலுகாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் ஒரு வீட்டுக்கு சென்று அங்கு ஏற்பட்டிருந்த விரிசலை பார்வையிட்டார். பின்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.45 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மந்திரிகள் சுனில்குமார், அங்காரா, கலெக்டர் ராஜேந்திரா உள்பட பலர் இருந்தனர்.


Next Story