நகரி தொகுதியில் வீடு வீடாக சென்று அரசு நலத்திட்டங்களை எடுத்துக்கூறிய மந்திரி ஆர்.கே.ரோஜா
விஜயாபுரம், மிட்டூர் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு மந்திரி ஆர்.கே.ரோஜா நேரில் சென்று வீடு வீடாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
திருப்பதி,
நகரி தொகுதியில் விஜயாபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட விஜயாபுரம், மிட்டூர் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு மந்திரி ஆர்.கே.ரோஜா நேரில் சென்று வீடு வீடாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது அவர், ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி செய்து வரும் பல்ேவறு அரசு நலத்திட்டங்களை எடுத்துக்கூறினார்.
அப்போது அவர் கூறுகையில், ஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி, மக்களின் பொதுப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார். அதற்காக பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசு செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களும் பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெறுகிறது. அரசின் நலத்திட்டங்கள் தகுதியான மக்களை சென்றடையும், என்றார்.
முன்னதாக பல்வேறு கிராமங்களுக்கு சென்றபோது அந்தந்தக் கிராம மக்கள் வழிநெடுகிலும் மலர்கள் தூவியும், கற்பூர ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். அப்போது அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.