ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மந்திரி ரோஜா சிறப்பு பூஜை


ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மந்திரி ரோஜா சிறப்பு பூஜை
x

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை மந்திரி ஆர்.கே.ரோஜா சாமி தரிசனம் செய்ய வந்தார்

ஸ்ரீகாளஹஸ்தி,

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை மந்திரி ஆர்.கே.ரோஜா சாமி தரிசனம் செய்ய வந்தார். கோவிலுக்கு வந்த அவரை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு சிறப்பு வரவேற்பு அளித்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர்.

கோவிலுக்குள் சென்ற மந்திரி ஆர்.கே.ரோஜா ரூ.5 ஆயிரம் கட்டண சிறப்பு ராகு-கேது பூஜையில் பங்கேற்று வழிபட்டார். அதைத்தொடர்ந்து கோவிலில் நடக்கும் ருத்ராபிஷேகம், கால பைரவர் அபிஷேகத்தில் பங்கேற்று தரிசனம் செய்தார். அதன் பிறகு மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தார்.

கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். மந்திரிக்கு சாமி படம், பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story