வெளிநாட்டு கொள்முதல் நிதி சேவைகளை வழங்க தனியார் துறை வங்கிகளுக்கு ஒப்புதல்!
பாதுகாப்பு அமைச்சகம் மூன்று தனியார் துறை வங்கிகளுக்கு வெளிநாட்டு கொள்முதல் நிதி சேவைகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
தனியார் துறை வங்கிகளுக்கு வெளிநாட்டு கொள்முதல் நிதி சேவைகளை வழங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுவரை, அங்கீகரிக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இந்த சேவைகளை வழங்க பயன்படுத்தப்பட்டு வந்தன.இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், புதுடெல்லியின் பி.சி.டி.ஏ., நிறுவனம், மூன்று வங்கிகளுடன் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
வெளிநாட்டு கொள்முதலுக்கான கடன் கடிதம் மற்றும் நேரடி வங்கி பரிமாற்ற வணிகத்தை வழங்குவதற்கு ஹச்.டி.எப்.சி. வங்கி லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய மூன்று தனியார் துறை வங்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் நியமித்துள்ளது.
நிதிச் சேவைத் துறைகள் மூலம் தனியார் துறை வங்கிகளுக்கு பொதுத்துறை வணிகத்திற்கான கூடுதல் வழிகளைத் திறக்கும் நோக்கில், பாதுகாப்பு அமைச்சகம் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த மூன்று வங்கிகளுடனும் கையெழுத்திடப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் ரூ.2000 கோடிக்கு வணிகத்தை அனுமதிக்கலாம். இந்த வங்கிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவைப்பட்டால் மேலும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.