ஆப்பிரிக்காவிலிருந்து 25க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இந்தியாவிற்கு கொண்டு வர ஏற்பாடு - மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ்


ஆப்பிரிக்காவிலிருந்து 25க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இந்தியாவிற்கு கொண்டு வர ஏற்பாடு - மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ்
x

நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து 25க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் மத்திய பிரதேசத்திற்கு படிப்படியாகக் கொண்டு வரப்படும்.

குவாலியர்,

இந்தியாவில் உள்ள வரலாற்று வாழ்விடத்திற்கு அழிந்து போன உயிரினங்களை குறிப்பாக சிறுத்தைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின்படி நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து 25க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தின் குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்கு (கேஎன்பி) எதிர்காலத்தில் படிப்படியாகக் கொண்டுவரப்படும் என்று மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ஆரம்பத்தில், எட்டு சிறுத்தைகள் செப்டம்பர் 17 அன்று பூங்காவிற்கு வரும். செப்டம்பர் 17 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி சிறுத்தைகளை பூங்காவில் கட்டப்பட்டுள்ள பிரத்யேக கூண்டுகளில் விடுவிப்பார் என்று தெரிவித்தார்.

அதேபோல, மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், இந்தியா மட்டுமின்றி ஆசியாவில் இருந்தும் அழிந்து போன சிறுத்தைகள், இனி இங்கு குடியமர்த்தப்படும். இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் சிறுத்தைகள் முதலில் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் பெரிய அடைப்புகளில் விடுவிக்கப்படும் என்றார்.


Next Story