குளத்தில் மூழ்கி தாய்-மகள் பலி


குளத்தில் மூழ்கி தாய்-மகள் பலி
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குளத்தில் மூழ்கி தாய்-மகள் உயிரிழந்தனர்.

உப்பள்ளி:

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா பியாயட்டி கிராமத்தை சேர்ந்தவர் முகுதப்பீ மெகபூப் ஷாப் (வயது 38). இவரது மகள் சைனாஜ் (9). நேற்று முன்தினம் இருவரும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். பின்னர், அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டு வரும் வழியில் அந்த பகுதியில் இருந்த குளத்தில் இறங்கி குளித்தனர். அவர்கள் குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் 2 பேருக்கு நீச்சல் தெரியாது என்பதால், இருவரும் நீரில் தத்தளித்தனர். மேலும், கத்தி கூச்சலிட்டனர். ஆனால் அந்த பகுதியில் யாரும் இல்லை. இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து அந்த பகுதி வழியாக சென்றவர்கள் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும், குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி உயிரிழந்த தாய் மற்றும் மகளின் உடல்களை மீட்டனர். அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story