மூதாட்டி கொலையில் தாய்-மகன் கைது


மூதாட்டி கொலையில் தாய்-மகன் கைது
x

சித்ரதுர்காவில் மூதாட்டி கொலை வழக்கில் தாய்-மகனை போலீசார் கைது செய்தனர். தங்க நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை தீர்த்துக்கட்டியது அம்பலமாகியது.

சிக்கமகளூரு:-

மூதாட்டி கொலை

சித்ரதுர்கா அருகே மல்லூரஹள்ளி கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் பெண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாயக்கனஹட்டி போலீசார் அந்த பெண்ணின் உடலை விசாரித்தனர். அப்போது அவரை யாரோ மர்மநபர்கள் கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசி தீவைத்து எரித்தது தெரியவந்தது.

மேலும் அவர், கொண்டலஹள்ளியை சேர்ந்த ஜெயம்மா (வயது 76) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு, ஜெயம்மாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

தாய்-மகன் கைது

இந்த நிலையில், மூதாட்டியை கொலை செய்ததாக அதே கிராமத்தை சேர்ந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கொண்டலஹள்ளியை சேர்ந்த ராதம்மா (வயது 46), அவரது மகன் நவீன் (28) என்பது தெரியவந்தது. மேலும், ஜெயம்மாவிடம் இருந்த தங்க நகைகளை கொள்ளையடிக்க 2 பேரும் திட்டமிட்டனர். அதன்படி சம்பவத்தன்று மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.

பின்னர், மூதாட்டியின் உடலை மல்லூரஹள்ளி வனப்பகுதியில் போட்டு தீவைத்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story