மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; பஜ்ரங்தள தொண்டர்கள் 2 பேர் சாவு
பத்ராவதியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பஜ்ரங்தள தொண்டர்கள் 2 பேர் உயிாிழந்தனர்.
சிவமொக்கா;
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புராவை சேர்ந்தவர்கள் உத்தம், மனோஜ். இவர்கள் 2 பேரும் பஜ்ரங்தள அமைப்பில் தொண்டர்களாக இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 2 பேரும் சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதிக்கு சென்றுள்ளனர்.
பத்ராவதி டவுன் ஜங்ஷன் சதுக்கம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர் மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த உத்தமும், மனோஜூம் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பத்ராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.
Related Tags :
Next Story