காயமடைந்த கணவனை எஸ்.பி.அலுவலகத்திற்குத் தோளில் சுமந்து சென்று நீதி கேட்ட மனைவி- வீடியோ


காயமடைந்த கணவனை எஸ்.பி.அலுவலகத்திற்குத் தோளில் சுமந்து சென்று நீதி கேட்ட மனைவி- வீடியோ
x

ம்ர்ம நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த கணவனை எஸ்.பி.அலுவலகத்திற்குத் தோளில் சுமந்து சென்று நீதி கேட்ட மனைவி வீடியோ வைரலாகி உள்ளது

ஷாஹ்டோல்

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஜெனட்லால் யாதவ் இவர் ஒரு கூலித் தொழிலாளி சோஹாக்பூர் பகுதியில் ஹரி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் இளைஞர்கள் சிலர் அவரை தாக்கியுள்ளனர். அவரது பணத்தையும் மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். காயமடைந்த ஜெனட்லால்சுற்றி இருந்தவர்களால் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், ஜெனட்லாலின் மனைவி ராணி யாதவ் சோஹாக்பூர் போலீசில் புகார் அளித்தார். சோஹாக்பூர் போலீசார் மூன்று குற்றவாளிகள் விபின் யாதவ், கம்லி யாதவ் மற்றும் தினேஷ் யாதவ் மீது தாக்குதல் வழக்கு பதிவு செய்தனர். இருப்பினும், போலீசார்நடவ்டிக்கையில் ராணி திருப்தியடையவில்லை. இதனால் அவர் தனது கணவரை முதுகில் சுமந்துகொண்டு ஷாஹ்டோலில் உள்ள போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளார்.

ராணியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) முகேஷ் வைஷ்யாவை சந்தித்து புகார் மனு அளித்து உள்ளார்.




Next Story