மத்தியபிரதேசத்தில் நர்மதா ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் உயிரிழப்பு


மத்தியபிரதேசத்தில் நர்மதா ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் உயிரிழப்பு
x

கோப்புப்படம்

மத்தியபிரதேசத்தில் நர்மதா ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

செஹோர்,

மத்தியபிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் உள்ள ஜஹஜ்புரா கிராமத்தில் நர்மதா ஆற்றில் 3 வாலிபர்கள் நேற்று காலை குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் 3 பேரும் திடீரென ஆற்று நீரில் மூழ்கினர்.

இதுபற்றி தகவல் தெரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மூழ்கிய 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story