முகலூர் கிராம பஞ்சாயத்து கூட்டம்
சர்ஜாப்புரா அருகே முகலூர் கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆனேக்கல்:
பெங்களூரு புறநகர் மாவட்டம் சர்ஜாப்புரா அருகே உள்ள கூடகனஹள்ளி கிராமத்தில் முகலூர் கிராம பஞ்சாயத்தின் 2022-23 ஆண்டுக்கான முதல் கிராம சபை கூட்டம் நடந்தது. முகலூர் கிராம பஞ்சாயத்து தலைவர் நாராயணசாமி தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பொதுமக்கள், பஞ்சாயத்து தலைவர் நாராயணசாமி மற்றும் உறுப்பினர்களிடம் பல்வேறு பிரச்சினைகள், குறைகளை தெரிவித்தனர். இதைதொடர்ந்து நாராயணசாமி பேசியதாவது:-
கிராம பஞ்சாயத்து வளர்ச்சிக்கு மாநில மற்றும் மத்திய அரசுகளின் மானியத்தை பயன்படுத்தி கிராமம் உயர் மட்டத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது, ஏற்கனவே கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் சிமெண்டு சாலை உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் நாட்களில் பிரச்னைகளை படிப்படியாக தீர்க்க நாங்களும், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.