நாடு முழுவதும் ஜூலையில் 31.59 செ.மீ மழை பெய்துள்ளது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


நாடு முழுவதும் ஜூலையில் 31.59 செ.மீ மழை பெய்துள்ளது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
x

நாடு முழுவதும் ஜூலையில் 31.59 செ.மீ மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யும். இந்த மழை நாட்டின் நீர்த்தேவையில் பெரும்பான்மையை நிறைவேற்றுகிறது. இந்தத் தென்மேற்குப் பருவமழையால் அரபிக்கடலையொட்டியுள்ள மாநிலங்கள் முதல் மத்திய மாநிலங்கள் வரை மழையை பெறுகிறது.

இந்தநிலையில் வட இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழையை முன்னிட்டு கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரங்களின் சாலை முழுவதும் பல இடங்களில் வெள்ளக்காடாக உள்ளது. வீடுகள் மற்றும் கடைகள் பெருமளவில் கனமழை மற்றும் மேகவெடிப்புகளால் பாதிக்கப்பட்டு உள்ளன.

1958 ஜூலை 20-21ல் 266.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. இது தான் டெல்லியில் பெய்த அதிகபட்ச கனமழையாக கருதப்படுகிறது. அதற்கடுத்ததாக, 1982ம் ஆண்டு ஜூலை 25-26ல் பதிவான 169.9 மில்லி மீட்டர் கனமழை 2ஆவது அதிகபட்ச கனமழையாக கருதப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்த மாதம் ஜூலை 8-9-ல் 153 மில்லி மீட்டர் மழை 3வது அதிகபட்ச மழைப்பொழிவாகக் கருதப்படுகிறது. இதன்மூலம், 41 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அதிக கனமழை பதிவாகி இருக்கிறது.

இந்தநிலையில், நாடு முழுவதும் ஜூலையில் 31.59 செ.மீ மழை பெய்துள்ளதாகவும், தென்மேற்கு பருபமழை இயல்படை விட 13% அதிகம் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story