மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சாவு


மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சாவு
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் உயிரிழந்தார்.

சதாசிவநகர்:

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா ருத்ரபட்டணாவை சேர்ந்தவர் பிரசாந்த் நாயக் (வயது 27). இவர் பெங்களூரு மாநகராட்சியில் சுகாதாரத்துறை ஆய்வளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரசாந்த் நாயக் தனது மோட்டார் சைக்கிளில் சதாசிவநகரில் இருந்து ஜே.பி.நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது பிரசாந்த்தின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தறிகெட்டு ஓடி நடைபாதையில் ஏறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் பரிதாபமாக இறந்தார். விபத்து பற்றி அறிந்ததும் சதாசிவநகர் போக்குவரத்து போலீசார் பிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிரசாந்த் மோட்டார் சைக்கிளை வேகமாகவும், கவனக்குறைவாவும் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்து உள்ளது. விபத்து குறித்து சதாசிவநகர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story