நமீபியா சிவிங்கிப்புலி உயிரிழப்பு..!


நமீபியா சிவிங்கிப்புலி உயிரிழப்பு..!
x
தினத்தந்தி 28 March 2023 2:06 AM GMT (Updated: 28 March 2023 2:08 AM GMT)

நமீபியாவில் இருந்து குணோ தேசிய பூங்காவிற்கு வரவழைக்கப்பட்ட பெண் சிவிங்கிப்புலி உயிரிழந்துள்ளது.

போபல்,

நமீபியாவில் இருந்து மத்தியப்பிரதேசம் மாநிலம் குணோ தேசிய பூங்காவிற்கு வரவழைக்கப்பட்ட பெண் சிவிங்கிப்புலி 'ஷாஷா' உயிரிழந்துள்ளது. சிறுநீரக பாதிப்பு காரணமாக சிறுத்தை உயிரிழந்ததாக அம்மாநில வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் சிவிங்கிப்புலிக்கு நான்கரை வயது ஆகும்.

இந்தியாவில் 1952 ம் ஆண்டு முற்றிலும் அழிந்துவிட்ட இனமாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக நமீபியாவிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, நமீபியாவில் இருந்து 3 ஆண் சிவிங்கிப்புலிகள், 5 பெண் சிவிங்கிப்புலிகள் என மொத்தம் 8 சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்பட்டு மத்தியப்பிரதேசம் மாநிலம் குனோ தேசிய பூங்காவில் புலிகள் விடப்பட்டன.


Next Story