மத்திய பிரதேசம்: குனோ பூங்காவில் நமீபிய பெண் சிறுத்தை ஈன்ற குட்டி உயிரிழப்பு


மத்திய பிரதேசம்: குனோ பூங்காவில்  நமீபிய பெண் சிறுத்தை ஈன்ற  குட்டி உயிரிழப்பு
x

மத்திய பிரதேசம், குனோ தேசிய பூங்காவில் ஒரு சிறுத்தை குட்டி உயிரிழந்தது.

போபால்,

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட மேலும் ஒரு சிறுத்தை குனோ தேசிய பூங்காவில் உயிரிழந்தது. தென்னாப்பிரிக்காவில் இருந்து மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு இந்த ஆண்டு பிப்ரவரி 18 அன்று 11 சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டது. அதில் உதய் என்றழைக்கப்படும் சிறுத்தைக்கு கடந்த ஏப்.23 அன்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனை கவனித்த வனக் குழுவினர் அதனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுத்தை உயிரிழந்தது. இந்நிலையில் குணோ பூங்காவில் கடந்த 9-ம் தேதி ஒரு சிறுத்தை உயிரிழந்தது.

நமீபியாவில் இருந்து கடந்த ஆண்டு குனோ தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு சிறுத்தைகளில் ஒன்றான சாஷா, மார்ச் மாதம் இறந்தது. ஏப்.23 இரண்டாவது சிறுத்தை இறந்தது. கடந்த 9- ம்தேதி மேலும் ஒரு சிறுத்தை உயிரிழந்தது.

இந்தநிலையில், நமீபிய பெண் சிறுத்தை ஈன்ற 4 குட்டிகளில் ஒரு சிறுத்தை குட்டி உயிரிழந்துள்ளது. ஏற்கனவே 3 சிறுத்தைகள் உயிரிழந்த நிலையில், தற்போது குட்டியும் உயிரிழந்துள்ளது வனத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தை உயிரிழப்பு 4ஆக அதிகரித்துள்ளது.


Next Story