சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்ட நந்திமலை யோக நந்தீஸ்வரர் கோவில்


சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்ட நந்திமலை யோக நந்தீஸ்வரர் கோவில்
x

சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சிக்பள்ளாப்பூரில் நந்திமலை யோக நந்தீஸ்வரர் கோவில் இன்று வரை கட்டிட கலைகளில் சிறந்து விளங்குகிறது

இந்திய வரலாற்றில் இன்றுவரை பெயர் பெற்று விளங்கும், 11-வது சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சிக்பள்ளாப்பூர் யோகநந்தீஸ்வரர் கோவில் கட்டிட கலைகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் நந்திமலையின் இயற்கை காட்சியை காண இன்றுவரை சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் பெருமை அளிப்பதாக உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று சிக்பள்ளாப்பூரில் உள்ள நந்திமலை. இது பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். ஆண்டு தோறும், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மலை உச்சியில் வெண் மேக மூட்டங்கள் நிறைந்து காணப்படுவதுபோன்று காட்சி அளிக்கும். இது சுற்றுலா பயணிகளை இன்றுவரை வெகுவாக கவர்ந்து வருகிறது.

நந்திமலை யோகநந்தீஸ்வரர் கோவில்

அதேநேரம் இந்த நந்திமலையின் மற்றொரு சிறப்பு மலை உச்சியில் உள்ள யோக நந்தீஸ்வர் கோவில். இதை வைத்துதான் நந்திமலை என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டது. சுற்றுலாவிற்கு வரும் மக்கள் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். முன்னொரு காலத்தில் இந்த நந்திமலை வனப்பகுதி போன்றுதான் காணப்பட்டது.

சோழமன்னர் ஆட்சி காலத்தில்தான் இந்த யோகநந்தீஸ்வரர், நந்திமலை உருவாக்கப்பட்டது. கோவில் கட்டிட கலைகள் மற்றும் சிற்பங்கள் அனைத்து சோழ மன்னர் காலத்தில் வடிவமைக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த நந்திமலைக்கென்று சிறப்பு உள்ளது. அதாவது 11-வது சோழ மன்னர் காலத்தில் எதிரி நாட்டினர் சிக்பள்ளாப்பூரை சுற்றி வளைத்து போர் தொடுத்தனர். அப்போது 11-வது சோழ மன்னன் போரிட்டு சிக்பள்ளாப்பூரை தன்வசப்படுத்தினர். இதை நினைவூட்டு விதமாக இந்த யோகநந்தீஸ்வரர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அது மலைப்பகுதியில் அமைந்திருப்பதால் மக்கள் அனைவரும் நந்திமலை என்று அழைக்க தொடங்கவிட்டனர்.

1,489 அடிக்கு படிக்கட்டுகள்

இந்த மலை தரைதளத்தில் இருந்து 1,489 அடி உயரம் கொண்டது. மன்னர் காலத்தில் மக்கள் வனப்பகுதி வழியாக நடந்து சென்றுதான் இந்த யோக நந்தீஸ்வரை வழிப்பட்டனர். மேலும் மலையின் உச்சிக்கு சென்று இயற்கை அழகை ரசித்து வந்தனர். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலம் வந்தபோது, 150-ம் நூற்றாண்டில், ரிசிட்ஸ் கேங்கி என்ற ஆங்கிலேயர் ஆட்சி வந்தார்.

அப்போது அவர் மக்கள் மலை உச்சியில் சென்று சாமியை வழிபாடு ெசய்ய 1,489 அடி உயரம் வரை படிக்கட்டுகளை அமைத்தார். இது இந்திய சரித்திரத்தில் இடம் ெபற்றது. பின்னர் இந்த நந்திமலை இந்தியா முழுவதும் புகழ் பெற்றது. சோழர் காலத்தில் கோவில் அமைக்கப்பட்டது மற்றும், கட்டிட கலைகள், சிற்பனை நினைவூட்டும் விதமான கல்வெட்டுகள் வைக்கப்பட்டது. இன்றுவரை அந்த கல்வெட்டு நந்திமலையில் உள்ளது.

சுற்றுலா தலங்களில் சிறந்து விளங்கும்

இதனை சுற்றுலா சுற்றுலா பயணிகள் பார்த்து, வரலாற்றை தெரிந்து கொள்கிறார்கள். மேலும் மலையில் அடிவாரத்தில் சுற்றுலா பயணிகளை வழிநடத்துவதற்கு மற்றும் அவர்களிடம் நந்திமலை, யோக நந்தீஸ்வர் கோவில் குறித்த சிறப்பை எடுத்து கூற தனி அலுவலகம் அமைக்கப்பட்டது.

இந்த அலுவலகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு யோக நந்தீஸ்வர் சாமி, நந்திமலை குறித்த வரலாற்றை கேட்டு தெரிந்து கொண்டு செல்கின்றனர். இதனால் இன்றுவரை இவை இந்தியா சுற்றுலா தலங்களில் ஒன்றாக சிறந்து வருகிறது. இந்த புகழ் 11-வது சோழ மன்னன் மற்றும் ஆங்கிலேயர் ரிசிட்ஸ் கேங்கிக்குரியது என்று இன்றுவரை மக்கள் கூறி வருகின்றனர்.


Next Story