டோல் கேட் கட்டணம் தொடர்பாக தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போட்டு கொண்ட பெண்கள்


டோல் கேட் கட்டணம் தொடர்பாக தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போட்டு கொண்ட பெண்கள்
x

டோல் கேட் கட்டணம் தொடர்பாக இரண்டு பெண்கள் ரோட்டில் ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போட்டு கொண்டனர்

நாசிக்

மாராட்டிய மாநிலம் நாசிக்கின் பிம்பால்கான் டோல் கேட்டில் ஒரு பெண் ஊழியர் ஒருவர் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு காரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஒருவரின் மனைவி காரில் வந்து உள்ளார். அவர் டோல் கேட் கட்டணம் செலுத்த முடியாது என கூறி உள்ளார்.

இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கி கொண்டனர். இந்த சண்டையை சுற்றி இருந்தவர்கள் விலக்கி விடாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். அதனை வீடியோவாகவும் எடுத்து உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவில், இரண்டு பெண்களும் ஒருவரையொருவர் முடியை இழுப்பதும், அறைவதும், தள்ளுவதும் தெரிகிறது. மராத்தி மொழியில் அவர்கள் ஒருவரையொருவர் திட்டி கொள்கின்றனர்.




Next Story