தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கிளை தொடக்கம்
சிவமொக்காவில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கிளையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்
சிவமொக்கா-
சிவமொக்கா டவுன் நவிலே அருகே ராகிகுட்டா பகுதியில் உள்ள மொரார்ஜி தேசாய் பள்ளி கட்டிடத்தில் நாட்டின் 4-வது தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கிளை அமைக்கப்பட்டது. அதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெங்களூருவில் இருந்தபடி காணொலி மூலம் கலந்து கொண்டு தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கிளையை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, மாவட்ட பொறுப்பு மந்திரி நாராயணகவுடா ஆகியோரும் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிவமொக்காவில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா, ராகவேந்திரா எம்.பி., மாவட்ட கலெக்டர் செல்வமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story