சுதந்திர தினவிழாவிலும் தேசிய கட்சிகள் அரசியல் செய்கிறது- குமாரசாமி குற்றச்சாட்டு


சுதந்திர தினவிழாவிலும் தேசிய கட்சிகள் அரசியல் செய்கிறது-  குமாரசாமி குற்றச்சாட்டு
x

சுதந்திர தினவிழாவிலும் தேசிய கட்சிகள் அரசியல் செய்கிறது என்று குமாரசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

பெங்களூரு: பெங்களூரு ஜனதாதளம் (எஸ்) கட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்த முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது;- நாடு சுதந்திரம் அடையவதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் கட்சி வேறு. தற்போது நாட்டில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வேறு. தற்போது இருப்பது போலி காங்கிரஸ் ஆகும். அரசு விளம்பரத்தில் நேருவின் புகைப்படம் இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். இந்த நாட்டில் பிரிவினை ஏற்படுவதற்கு நேரு தான் காரணம் என்று பா.ஜனதா தலைவாகள் கூறி வருகின்றனர்.

பிரிவினை பற்றி பா.ஜனதாவினர் பேசுவதற்கு தகுதி இல்லை. காந்தியை கொன்றவர்கள் சுதந்திர தினவிழாவுக்காக வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றும்படி பா.ஜனதாவினர் பிரசாரம் செய்கிறார்கள். காங்கிரசார் பெங்களூருவில் ஊர்வலம் நடத்துகிறார்கள். சுதந்திர தினவிழாவிலும் தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜனதாவும் அரசியல் செய்கிறது. அரசின் விளம்பரத்தில் நேருவின் புகைப்படம் இடம் பெறாமல் செய்திருப்பது சரியானது இல்லை. ஏனெனில் சுதந்திர போராட்டத்தில்நேருவின் பங்கு என்ன?, இந்த நாட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பு பற்றி நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். இந்த விவகாரத்தில் பா.ஜனதா அரசு நடந்து கொண்டுள்ள விதம் சரியானது இல்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.



Next Story