பண்ட்வால் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது


பண்ட்வால் அருகே   பெண்ணுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ட்வால் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா கன்னியானாவைச் சேர்ந்தவர் அபூபக்கர் (வயது 46). கூலி தொழிலாளி. இவர் கடந்த 13-ந் தேதி விட்டலா பகுதியை அடுத்த கசப்பா கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிகேட்பதற்காக நிறுத்தினார். அந்த பெண் இவரை பார்த்ததும் முதலில் பயந்துபோனார். இதையடுத்து அபூபக்கர் அந்த பெண்ணிடம், நான் செல்லும் ஊருக்கும் வழி கூறும்படி கூறினார்.

அதை கேட்ட அந்த பெண் அபூபக்கர் செல்லும் இடத்திற்கான வழியை கூறினார். அப்போது திடீரென்று அபூபக்கர் அந்த பெண்ணின் கையை பிடித்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்கு அபூபக்கர் தப்பியோடிவிட்டார். இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் விட்டலா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் அபூபக்கரை போலீசார் கைது செய்தனர்.


Next Story