பெங்களூரு அருகே சிறுத்தை, இரும்பு கூண்டில் சிக்கியது


பெங்களூரு அருகே  சிறுத்தை, இரும்பு கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 PM IST (Updated: 23 Feb 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே கிராம மக்களை அச்சுறுத்திய சிறுத்தை, இரும்பு கூண்டில் சிக்கியது

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் தியாம கொண்டலு அருகே மன்னா கிராமம், திரானஹள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. சமீபத்தில் இந்த கிராமங்களில் ஒரு சிறுத்தை சுற்றி திரிந்தது. மேலும் கிராம மக்கள் வளாத்து வரும் ஆடு, மாடு, கோழிகளை சிறுத்தை அடித்து கொன்று தின்று வந்தது. இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க மன்னா கிராமத்தில் வனத்துறையினர் சார்பில் இரும்பு கூண்டு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டுக்குள் ஒரு சிறுத்தை சிக்கி இருந்தது. அந்த சிறுத்தைக்கு 3 வயதாகிறது, அது ஆண் சிறுத்தை ஆகும். இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து இரும்பு கூண்டுக்குள் இருந்து சிறுத்தையை மீட்டார்கள். பின்னர் பன்னரகட்டா வனப்பகுதியில் அந்தசிறுத்தை விடப்பட்டது. அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.



Next Story