சிக்கமகளூரு அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2½ லட்சம் பறிமுதல்
சிக்கமகளூரு அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல்
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து உள்ளது. இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேப்போல் சிக்கமகளூரு மாவட்டத்திலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் சிக்கமகளூரு மாவட்டம் கேபிஹால் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.82 ஆயிரம் ரொக்கம் இருந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் காரில் வந்தவரிடம் இல்லை.
போலீசார் விசாரணை
இதையடுத்து ரூ.82 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல சிக்கமகளூரு அருகே உள்ள கிரியபுரா பகுதியில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் இருந்தது. காரில் வந்தவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆவணங்களை காண்பித்து விட்டு ரொக்கத்தை வாங்கி விட்டு செல்லும்படி போலீசார் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.