தார்வார் அருகே விபத்தில் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சாவு
தார்வார் அருகே விபத்தில் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா கண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தா (வயது 39). இவர் ஹாவேரி மாவட்டம் சவனூர் தாலுகா சிரடபடகி கிராமத்தில் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சிவானந்தா பணி முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் நவலகுந்து நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தார்வார் அருகே யரேகொப்பா பகுதியில் வந்தபோது, எதிரே வந்த டிராக்டரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிவானந்தா, தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story