சிரிகெரே அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்


சிரிகெரே அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:30 AM IST (Updated: 31 Oct 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

சிரிகெரே அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்டம் சிரிகெரே தாலுகா காப்புகாடு பகுதி அருகே உள்ள குடி கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து இரைதேடி வெளியேறிய 3 காட்டுயானைகள் இரவு நேரங்களில் அந்த பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வந்தன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்த பகுதியை சேர்ந்த எல்லப்பா என்பவரின் பாக்கு தோட்டத்திற்குள் அந்த காட்டுயானைகள் புகுந்துள்ளது.

மேலும் அவை அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட பாக்குமரங்களை தும்பிக்கையால் பிடுங்கியும், காலால் மிதித்தும் நாசப்படுத்தியது. மேலும் அவை அங்கிருந்து கிருஷ்ணப்பா என்பவருக்கு சொந்தமான மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்தன. அவை அங்கு பயிரிட்டு இருந்து மக்காச்சோளங்களை மிதித்து நாசப்படுத்தின.

இதையடுத்து அவை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டன. இந்த நிலையில் தோட்டத்திற்கு வந்த விவசாயிகள், பயிர்கள் சேதமடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story