உப்பள்ளி அருகேகிரிக்கெட் சூதாட்டம்; 6 பேர் கைது
உப்பள்ளி அருகே கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
உப்பள்ளி-
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டமும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா பெண்டிகேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட மண்டூர் ரோடு மில்லத் நகர் ஆகிய பகுதியில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் நாராயண பரமணி தலைமையிலான போலீசார் சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் வைத்து ஐ.பி.எல். சூதாட்டம் நடப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அதேப்பகுதியை சேர்ந்த அல்தாப் ஏ.கித்தூர் (வயது 38), பிரவீன் செட்டி (35), இக்பால் அகமத் பியாளி (35), சமீர் ஹெக்கேரி (30), சிவகுரு இனாம்ஜி (28), மற்றும் பரத் சவுத்ரி (30) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஐ.பி.எல். சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.1 லட்சம் ரொக்கம், கணினி, செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பெண்டிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.