நீட் தேர்வு வழக்கு: மருத்துவக் கல்வி முறையில் மாற்றம் தேவை - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து
நீட் வழக்குகள் மருத்துவக் கல்வியில் சீர்த்திருத்தம் தேவைப்படுவதற்கான அடையாளம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்..
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள கங்கா ராம் நினைவு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியதாவது:-
நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. வழக்குகளின் எண்ணிக்கையை பார்க்கும்போதே மருத்துவக் கல்வி முறையில் மாற்றம் தேவை என்பது தெரிகிறது. நீட் வழக்குகள் மருத்துவக் கல்வியில் சீர்த்திருத்தம் தேவைப்படுவதற்கான அடையாளம்.
மத்திய அரசின் கொள்கை சார்ந்த விவகாரங்களில் நீதிமன்றங்கள் அடிக்கடி தலையிட முடியாது. தலையிடாது என்றாலும் மாணவர்கள் கோரிக்கை ஏற்று மாற்றம் செய்ய வேண்டியது அரசின் கடமை. மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதில் தலையிட வேண்டியது நீதிமன்றத்தின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story