நீட் தேர்வு: ராஜஸ்தான் மாணவி தேசிய அளவில் முதலிடம்


நீட் தேர்வு: ராஜஸ்தான் மாணவி தேசிய அளவில் முதலிடம்
x

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது.

ஒட்டுமொத்தமாக 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் நீட் தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர். இம்முறை நீட் தேர்வு இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டின் நகரங்களான அபுதாபி, பாங்காக், கொழும்பு, தோஹா, காத்மண்டு, கொலாலம்பூர், லோகஸ், மனமா, மஸ்கட், ரியாத், சார்ஜா, சிங்கப்பூர், துபாய், குவைத் ஆகிய இடங்களிலும் நீட் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியானது. இதில், 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். டெல்லியை சேர்ந்த வஸ்தா ஆஷிஷ் பத்ரா என்ற மாணவனும், கர்நாடகாவை சேர்ந்த ரிஷிகேஷ் நாக்பூஷன் என்ற மாணவரும் 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால், டை பிரேக்கர் முறைப்படி தனிஷ்கா முதல் இடம், வஸ்தா 2-வது இடம், ரிஷ்கேஷ் 3- வது இடம் பிடித்துள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதியவர்களில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தேர்ச்சி விகிதம் 56.3 என்றும் தேர்வு முகமை அறிவித்துள்ளார்.


Related Tags :
Next Story