கர்நாடகத்தில் புதிதாக 1,600 தீயணைப்பு வீரர்கள்
கர்நாடகத்தில் புதிதாக 1,600 தீயணைப்பு வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு கர்நாடக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நேற்று பெங்களூருவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரெயின்போ லே-அவுட் உள்பட பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், பெங்களூருவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளோம்.
தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 36 ரப்பர் படகுகள், 56 தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணிக்கு தயாராக உள்ளது. மேலும் தீயணைப்பு துறைக்கு புதிதாக 1,600 வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி அளித்து பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்றார்.
Related Tags :
Next Story