கர்நாடகத்தில் புதிதாக 379 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக   379 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 379 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 20 ஆயிரத்து 643 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 198 பேருக்கும், மைசூருவில் 26 பேருக்கும், பெலகாவியில் 11 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 18 பேருக்கும், தார்வாரில் 10 பேருக்கும், ஹாசனில் 12 பேருக்கும், ராய்ச்சூரில் 11 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தட்சிண கன்னடாவில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

4 ஆயிரத்து 271 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story