கர்நாடகத்தில் புதிதாக 749 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக   749 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 749 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-கர்நாடகத்தில் நேற்று 17 ஆயிரத்து 979 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக பெங்களூருவில் 696 பேர், தட்சிண கன்னடாவில் 20 பேர், கோலார், உடுப்பியில் தலா 4 பேர் உள்பட 749 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. மைசூருவில் மட்டும் வைரஸ் தொற்றுக்கு ஒருவர் இறந்தார்.

இதுவரை 39 லட்சத்து 73 ஆயிரத்து 34 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 78 பேர் உயிரிழந்து உள்ளனர். 940 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 39 லட்சத்து 26 ஆயிரத்து 440 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 6 ஆயிரத்து 474 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 4.16 சதவீதமாக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.


Related Tags :
Next Story