பெட்ரோல் விற்பனை நிலையம், நகைக்கடை உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு


பெட்ரோல் விற்பனை நிலையம், நகைக்கடை உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு
x

சட்டசபை தேர்தலையொட்டி பெட்ரோல் விற்பனை நிலையம், நகைக்கடை உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த் நிலையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க அதிகாரிகளும், போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு எந்தவித சலுகைகளோ, பரிசு கூப்பன்களோ வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் நகைக்கடைகளில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் யாரேனும் நகைகள் வாங்கினால் அதுபற்றி கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அதையும் மீறி நகைகளை விற்றால் நகைக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நகைகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், டீசலை அதிக அளவில் விற்கக்கூடாது. அதேபோல் அதிக அளவில் கொள்முதலும் செய்யக்கூடாது. பரிசு கூப்பன்கள், சலுகைகள் போன்றவற்றை வழங்கக்கூடாது. தடையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெட்ரோல்-டீசலை அதிக அளவில் கொள்முதல் செய்ய வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story