அரசு பணிகளில் அனுபவம் வாய்ந்த முதியவர்களை பயன்படுத்த புதிய திட்டம்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு


அரசு பணிகளில் அனுபவம் வாய்ந்த முதியவர்களை பயன்படுத்த புதிய திட்டம்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x

அரசு பணிகளில் அனுபவம் வாய்ந்த முதியவர்களை பயன்படுத்த புதிய திட்டம் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: அரசு பணிகளில் அனுபவம் வாய்ந்த முதியவர்களை பயன்படுத்த புதிய திட்டம் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ரவீந்திரகலா சேத்ராவில் நேற்று நடைபெற்ற சர்வதேச முதியவர் தின நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

இலவச மருத்துவ பரிசோதனை

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எந்த பிரச்சினையும் இன்றி வாழ்வதற்காக, அவர்களுக்காக புதிய திட்டத்தை முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் கொண்டு வந்தேன். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு 2 முறை இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதுடன், அவர்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அதற்காக இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

வயதானவர்களுக்காக இலவச கண் பரிசோதனை செய்யும் திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்களுக்கு கண்ணாடி வழங்குவது, வயதானவா்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வயதானவா்கள் காது கேட்காமல் அவதிப்படுவதால், அதற்கான மருத்துவ வசதிகள், கருவிகள் வாங்கி கொடுக்க ரூ.500 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

முதியவா்களின் அனுபவத்தை பயன்படுத்த...

மாநிலத்தில் 12 புதிய புற்றுநோய் சிகிச்சை மையம் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வயதானவா்கள் தற்போதும் ஓய்வெடுக்க கூட நேரம் இல்லாமல் உழைத்து வருகிறார்கள்.அவர்களிடம் இருந்து இளைஞர்கள் பாடம் கற்று கொள்ள வேண்டும். வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் மனிதாபிமானத்துடன் ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும். இதுவே நாம் அவர்களுக்கு செய்யும் சிறந்த தொண்டாகும்.

மாநிலத்தில் அனுபவம் வாய்ந்த முதியவர்களின் ஆலோசனைகள் தேவையாக உள்ளது. குறிப்பாக அரசு பணிகளுக்கு அனுபவம் முக்கியமாகும். இதற்காக அரசு பணிகளில் அனுபவம் வாய்ந்த முதியவர்களை பயன்படுத்தி கொள்வதற்காக, புதிய திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story