வெள்ளத்தில் மூழ்கிய ரெயில் நிலையம்... தனியாக இருந்த புற்று நோயாளி - உயிர்காத்த விமானப்படை
அசாம் மாநிலத்தில் ரெயில் நிலையத்தில் சிக்கித் தவித்த புற்று நோயாளி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்
அசாம்- ல் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
அசாம்- ல் பெரிய அளவிலான நிலச்சரிவுகள் மற்றும் தேங்கிய நீர் ஆகியவற்றால் ரெயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் ரெயில் நிலையத்தில் சிக்கித் தவித்த புற்று நோயாளி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அந்த நபர், ஹஃப்லாங் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்தார். இதையறிந்த இந்திய விமானப்படை அதிகாரிகள், அவரை பத்திரமாக மீட்டு, ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story