அடுத்த ஆண்டு சிக்கமகளூரு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும்
அடுத்த ஆண்டு சிக்கமகளூரு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சி.டி.ரவி எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் ரமேஷ், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் முடிந்ததும் சி.டி.ரவி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சிக்கமகளூரு பண்டிகை என்னும் பெயரில் பிரமாண்டமான திருவிழா 4 நாட்கள் நடந்தது. அதேபோல அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கமகளூரு பண்டிகை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனி குழு அமைக்கப்படும். மேலும் 15 நாட்கள் நடக்கும் சிக்கமகளூரு பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.