கன்னையால் லால் கொலை வழக்கு: மேலும் ஒருவரை கைது செய்தது என்.ஐ.ஏ
கன்னையால் லால் கொலை வழக்கில் இதுவரை எட்டு பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜோத்பூர்,
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா. இவரது கருத்தை ஆதரித்து சமூக வலைத்தளத்தில் கன்னையா லால் என்ற டெய்லர் பதிவிட்டு இருந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கடை நடத்தி வந்த கண்னையா லாலை, பட்டப்பகலில் கடைக்குள் வைத்து இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் தலையை துண்டித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ கையில் எடுத்தது. கன்னையால் லால் கொலை தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.
Related Tags :
Next Story