இரவோடு, இரவாக பசவேஸ்வரா சிலை அகற்றம்


இரவோடு, இரவாக பசவேஸ்வரா சிலை அகற்றம்
x

உப்பள்ளியில் மேம்பால பணிக்காக கடும் எதிர்ப்பையும் மீறி இரவோடு, இரவாக பசவேஸ்வரா சிலை அகற்றப்பட்டது.

உப்பள்ளி:-

பசவேஸ்வரா சிலை

கா்நாடகத்தில் ெபங்களூருவுக்கு அடுத்தப்படியாக பெரிய நகரமாக உப்பள்ளி-தார்வார் உள்ளது. இந்த நிலையில் நகரில் தற்போது வாகன பெருக்கம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், உப்பள்ளி-தார்வார் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை சமாளிக்க புதிதாக மேம்பாலம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை தேர்வு செய்து மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் மேம்பால பணிக்காக உப்பள்ளி பகுதியில் உள்ள பசவேஸ்வரா சிலையை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால் மாநகராட்சியின் முடிவுக்கு லிங்காயத் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி அதிகாரிகள் லிங்காயத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், இந்த மேம்பால திட்டம் உப்பள்ளியில் மிக முக்கியமான திட்டம். இதனை செயல்படுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு அங்கு பசவேஸ்வரா சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனாலும் இதனை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு எடுக்கப்படவில்லை.

இரவோடு இரவாக அகற்றம்

இதனால் பசவேஸ்வரா சிலையை அகற்றும் பணி கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பசவேஸ்வரா சிலையை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி பொக்லைன், கிரேன் எந்திரங்களின் உதவியுடன் இரவோடு, இரவாக பசவேஸ்வரா சிலையை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள்.

இதையடுத்து விரைவில் அங்கு மேம்பால பணி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேம்பால பணி முடிவடைந்ததும் அதேப்பகுதியில் மீண்டும் பசவேஸ்வரா சிலை நிறுவப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கை லிங்காயத் அமைப்பினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Next Story