அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார் நிர்மலா சீதாராமன்


அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார் நிர்மலா சீதாராமன்
x

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இன்று முதல் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார்.

புதுடெல்லி,

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், இன்று முதல் தனது அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தில் ஜி-20 நிதியமைச்சர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

அடுத்ததாக, ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.

இதற்கடுத்து அமெரிக்க நிதிமந்திரி ஜேனட் ஏலன் அவைகளுடன், சர்வதேச நிதி ஆணையத்தின் தலைவரான டேவிட் மால்பாஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.

இறுதியாக, வாஷிங்டன் ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் "இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு" என்ற தலைப்பில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் உரையாற்றுகிறார்.


Next Story