நாங்கள் மத்தியில் ஆட்சி அமைத்தால் பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து - நிதிஷ் குமார் பேட்டி
நாங்கள் மத்தியில் ஆட்சி அமைத்தால் பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
பாட்னா,
'பாஜக அல்லாத கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்' என்று ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்-மந்திரியும் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகாரில் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார்.
இந்தநிலையில் பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியாதாவது
மத்தியில் அடுத்த ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்பு பாஜக அல்லாத கூட்டணிக்கு கிடைக்குமானால், பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததற்கு காரணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story