கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா பலி இல்லை
கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா பலி இல்லை.
பெங்களூரு: கர்நாடகத்தில் 24 ஆயிரத்து 652 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 839 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெங்களூரு நகரில் 775 பேர், தட்சிண கன்னடாவில் 17 பேர், பெலகாவி, தார்வார், மைசூருவில் தலா 4 பேர், துமகூரு, உடுப்பி, உத்தர கன்னடா, மண்டியா, கோலார், கலபுரகி, பல்லாரியில் தலா 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ராய்ச்சூரில், ஹாசனில் தலா 2 பேர், பாகல்கோட்டை, பீதர், தாவணகெரே, சிவமொக்காவில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 39 லட்சத்து 73 ஆயிரத்து 873 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கலபுரகி, கோலாரில் நேற்று தலா ஒருவர் இறந்தனர். 28 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 40 ஆயிரத்து 80 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று 913 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 39 லட்சத்து 27 ஆயிரத்து 353 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 6 ஆயிரத்து 398 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 3.40 சதவீதமாக உள்ளது.மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.