பா.ஜனதாவினருக்கு மரியாதை இல்லை - சித்தராமையா


பா.ஜனதாவினருக்கு மரியாதை இல்லை - சித்தராமையா
x

பா.ஜனதாவினருக்கு மரியாதை இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

என்னை இந்து விரோதி என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். அக்கட்சியை சேர்ந்த சி.டி.ரவி, என்னை சித்ராமுல்லா கான் என்று சொல்கிறார். மகாத்மா காந்தி இந்து அல்லவா?. அவரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை கொண்டாடுபவர்கள் இந்துக்களா?.

பா.ஜனதாவினருக்கு மரியாதை இல்லை. அவர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினருக்கு மரியாதை உள்ளதா?. னக்கு ஜனாதிபதி பதவியோ அல்லது பிரதமர் பதவியோ வழங்கினாலும் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டேன். எனது பிணம் கூட பா.ஜனதாவுக்கு செல்லாது.

ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு கொள்கை, கோட்பாடுகள் இல்லை. ஆட்சி அதிகாரத்திற்காக பா.ஜனதாவுடன் அக்கட்சி செல்லும். ஆட்சி அதிகாரத்திற்காக அக்கட்சியினர் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கொள்வார்கள்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story