அடுத்த 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்


அடுத்த 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 19 Oct 2023 2:53 PM IST (Updated: 19 Oct 2023 2:53 PM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியது என்றும், அடுத்த 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் பெய்யும். அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் இடையில், சற்று தாமதமாக தொடங்கியது.

இந்த தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் அதிக மழை பொழிவை பெறும். இது தவிர மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் சராசரியான மழையை கொடுக்கும்.

தென்மேற்கு பருவ மழை காலத்தில் தென் மாநிலங்களில் குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் இந்த பருவ காலத்தில் அதிக மழையை பெற்று வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியது என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 72 மணி நேரத்தில் தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல் இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story