ஆம் ஆத்மி தேசிய அளவில் உயருவதை சிலரால் பொருத்துக்கொள்ள முடியவில்லை - அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு


ஆம் ஆத்மி தேசிய அளவில் உயருவதை சிலரால் பொருத்துக்கொள்ள முடியவில்லை -  அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு
x

எங்கள் மீது பல வழக்குகளை அவர்கள் போட்டு வருகின்றனர். இருப்பினும், சிறைகளுக்கு நாங்கள் செல்ல அஞ்சவில்லை என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் புதிய கலால் கொள்கை குறித்து விசாரணை நடத்துமாறு, மத்திய புலனாய்வு அமைப்புக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பரிந்துரை செய்தார்.

இதில், டெல்லி மாநில துணை முதல்-மந்திரியும், கலால்துறையின் மந்திரியுமான மனீஷ் சிசோடியாவை, வினய் குமார் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்தநிலையில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மணீஷ் சிசோடியாவை அவர்கள் கைதுசெய்வார்கள் என்று நான் கூறிக்கொண்டே இருக்கிறேன். இந்தியாவில் தற்போது ஒரு புதிய அமைப்பு உள்ளது. அதில், யார் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கிறார்கள். பிறகு அந்த நபர் மீது ஒரு போலி வழக்கு உருவாக்கப்படுகிறது. அதுபோல இந்த வழக்கும் போலியானது. இதில் உண்மை ஏதும் இல்லை.

எங்கள் மீது பல வழக்குகளை அவர்கள் போட்டு வருகின்றனர். இருப்பினும், சிறைகளுக்கு நாங்கள் செல்ல அஞ்சவில்லை. ஆம் ஆத்மி-க்கான நேரம் வந்துவிட்டது. பஞ்சாப்பில் வெற்றி பெற்றதிலிருந்து ஆம் ஆத்மி வளர்ந்து கொண்டே வருகிறது. நாங்கள் தேசிய அளவில் உயர்வதை அவர்களால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அதனால்தான் அவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்றார்.


Next Story