காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிப்பு


காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2023 10:52 AM IST (Updated: 25 Jan 2023 11:54 AM IST)
t-max-icont-min-icon

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் நாளை 74-வது குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஏறத்தாழ 65 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். நாளை நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

இந்தநிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு ஏஸ்பி. பொன் ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவி சேகரன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story