காங்கிரஸ் பெண் பிரமுகர் பற்றி சமூக வலைத்தளத்தில் ஆபாச கருத்து
காங்கிரஸ் பெண் பிரமுகர் பற்றி சமூக வலைத்தளத்தில் ஆபாச கருத்துகளை பதிவிட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மங்களூரு:
மங்களூரு நகரை சேர்ந்தவர் பிரதீபா குலாய். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர், கடந்த 18-ந்தேதி சூரத்கல் சுங்கச்சுவாடிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில், பிரதீபா குலாயின் படத்தை ஆபாசமாக சித்தரித்து மர்மநபர்கள், சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்தை பதிவு செய்திருந்தனர். இதுகுறித்து பிரதீபா குலாய், மங்களூரு மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், நான் கடந்த 18-ந்தேதி சூரத்கல் சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது எடுக்கப்பட்ட படம் மற்றும் வீடியோவை சுதர்சன் பட் என்பவர் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே சுதர்சன் பட் தலைமறைவாகி இருந்தார். இதுகுறித்து மங்களூரு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.