முன்னாள் பெண் கவுன்சிலரின் ரூ.3.35 கோடி சொத்துகள் முடக்கம்


முன்னாள் பெண் கவுன்சிலரின்    ரூ.3.35 கோடி சொத்துகள் முடக்கம்
x

முன்னாள் பெண் கவுன்சிலரின் ரூ.3.35 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி ஆசாத்நகர் வார்டு முன்னாள் கவுன்சிலர் கவுரம்மா. இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக கவுரம்மா, அவரது கணவர் கோவிந்தராஜ் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கோா்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக கவுரம்மா சொத்து சேர்த்தது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தியதுடன், அவரது வீட்டில் சோதனையும் நடத்தினார்கள்.

அப்போது அவர், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, கவுரம்மாவுக்கு சொந்தமான ரூ.3.35 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். அதாவது விவசாய நிலம், கேளிக்கை விடுதி கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.


Next Story